ஞானசாரரின் முகநூல் பக்கம் தடை- ரத்ன தேரர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

264 0

ஞானசார தேரர் கூறியவை சரியென்று நிரூபிக்கப்பட்ட பின்னர் ஏன் அவரின் சமூக ஊடகம் தடை செய்யப்பட வேண்டு என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் பேஸ்புக் பக்கம் தடை செய்யப்பட்டுள்ளதாக அத்துரலியே ரத்ன தேரர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

அத்துடன், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இனவாதி என்று குறிப்பிட்டே அவரின் பேஸ்புக் பக்கம் தடை செய்யப்பட்டுள்ளதாக அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரை பொறுத்த வரையில் அவர் முஸ்லிம் தீவிரவாதத்துக்கு எதிராகவே தமது கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரும் அவர் இனவாதி என்று அடையாளப்படுத்தப் பட்டுள்ளார் என அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

ஞானசார தேரர் கூறியவை சரியென்று நிரூபிக்கப்பட்ட பின்னர் ஏன் அவரின் சமூக ஊடகம் தடை செய்யப்பட வேண்டும் என அத்துரலியே ரத்ன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.