சிறிலங்காவில் காலாவதியான இரசாயன பொருட்களை பயன்படுத்தி sanitizer தயாரித்த ஒருவர் கைது

344 0

சிறிலங்கா தலங்கம பகுதியில் காலாவதியான இரசாயன பொருட்களை பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்தும் கிருமிநாசினியை (sanitizer) தயாரித்து வந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபரிடம் இருந்து 50 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியுடைய இரசாயன பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது இரசாயன பொருட்கள் உள்ளடங்கிய 500 மில்லி லீட்டர் போத்தல்கள் 1422, லீட்டர் போத்தல்கள் 140 மற்றும் கைகளை சுத்தப்படுத்தும் கிருமிநாசினி 4 லீட்டர் கெலன்கள் 17 உம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.