ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 298 இலங்கையர்கள் இன்று சிறிலங்காற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல்-226 என்ற சிறப்பு விமானத்தின் மூலமாக இன்று (வியாழக்கிழமை) காலை மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு அவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அழைத்துவரப்பட்ட அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

