சிறிலங்காவில் காணப்படும் பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வுகளுடனே ஐக்கிய தேசிய கட்சி இம்முறை தேர்தலில் களமிறங்கியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இம்முறை தேர்தலில் போட்டியிடும் ஏனைய கட்சிகளை விடவும் வீட்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய இயலுமை ஐக்கிய தேசிய கட்சியிடம் மாத்திரமே உள்ளதாக தெரிவித்தார்.

