விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள் அதிகரித்து வருகின்றன! ஐநா எச்சரிக்கை

273 0

விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் உரிய நடவடிக்கை இல்லாமையே இதற்கான காரணம் என்று ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விலங்கு புரதத்திற்கான அதிக தேவை, நீடித்த விவசாய நடைமுறைகள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவையே கொரோனா போன்ற நோய்கள் அதிகரிப்பதற்கான காரணம் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விலங்கின நோய்கள் காரணமாக வருடாந்தம் இரண்டு மில்லியன் மக்கள் காவுகொள்ளப்படுகின்றனர்.

எபோலா, வெஸ்ட் நைல் வைரஸ் மற்றும் சார்ஸ் போன்ற நோய்கள் விலங்குகளுக்கு தோன்றியே பின்னர் மனிதர்களுக்கு தாவின. எனினும் இந்த நோய் தாவல் இயல்பாக இடம்பெறவில்லை.

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் சர்வதேச கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் அறிக்கையின்படி, இயற்கை சூழலின் சீரழிவால் இது இடம்பெறுகிறது.

எடுத்துக்காட்டாக நில சீரழிவு, வனவிலங்கு சுரண்டல், வளப் பிரித்தெடுத்தல் மற்றும் காலநிலை மாற்றம் என்பவை விலங்குகளும் மனிதர்களும் தொடர்பு கொள்ளும் விதத்தை மாற்றுகின்றன.

உதாரணமாக, கடந்த 50 ஆண்டுகளில் இறைச்சி உற்பத்தி 260 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மனிதர்கள் விவசாயத்தை விரிவுப்படுத்தியுள்ளார்கள். உள்கட்டமைப்பை விரிவுபடுத்தியுள்ளர்கள்

இந்தநிலையில் அணைகள், நீர்ப்பாசனம் மற்றும் தொழிற்சாலை பண்ணைகள் என்பன மனிதர்களில் 25 வீத தொற்று நோய்களுக்கு காரணமாக அமைந்துள்ளன.

காலநிலை மாற்றம் நோய்க்கிருமிகளின் பரவலுக்கு பங்களித்து வருகிறது என்றும் ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.