சிறிலங்காவில் ஆயுதங்களுடன் மஹரகம புபுலா கைது

328 0

சிறிலங்காவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட வந்த ´ககன´ எனும் நபருடன் தொடர்பில் இருந்த சரத் ஏக்கநாயக்க எனும் ´மஹரகம புபுலா´ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பன்னிபிட்டிய, நியதகல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடன் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்ட போது ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மற்றும் வீட்டின் மேல் பகுதியில் நாட்டப்பட்டிருந்த கஞ்சா செடிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இன்று (07) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.