அமெரிக்க விமானப்படை தாக்குதலில் அல் கொய்தா மூத்த தலைவன் பலி

313 0

201611230954356955_pentagon-says-air-strike-killed-senior-al-qaeda-leader-in_secvpfசிரியாவில் அமெரிக்க விமானப்படைகள் நடத்திய தாக்குதலில் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் மூத்த தலைவன் பலியானதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட்டகான் அறிவித்துள்ளது.

சிரியாவில் உள்ள சர்மடா பகுதியில் கடந்த 18-ம் தேதி அமெரிக்க விமானப்படைகள் நடத்திய தாக்குதலில் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் மூத்த தலைவனான அபு அப்கான் அல்-மஸ்ரி கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட்டகானின் செய்தி தொடர்பாளர் பீட்டர் குக் தெரிவித்துள்ளார்.

எகிப்து நாட்டில் பிறந்த அபு அப்கான் அல்-மஸ்ரி, ஆப்கானிஸ்தானில் உள்ள அல் கொய்தா இயக்கத்தில் சேர்ந்து, பின்னாட்களில் சிரியாவில் இருந்தபடி ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க படைகள்மீதும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள்மீதும் தாக்குதல் நடத்த சதிதிட்டம் தீட்டித் தந்ததாக பீட்டர் குக் குறிப்பிட்டுள்ளார்.