பிளேக் நோய்த் தாக்கம் எதிரொலி – பயன்னார் நகரம் முழுவதும் உஷார் நிலை

343 0

சீனாவில் பிளேக் நோய் தாக்கம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள பயன்னார் நகரம் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரசின் முதல் அலையில் இருந்து மீண்ட சீனா, தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.
இந்நோயில் இருந்து மீள்வதற்குள் மற்றொரு அதிர்ச்சியாக கொடூர பிளேக் நோயும் சீனாவில் தலைகாட்டத் தொடங்கியுள்ளது.