கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு: 5 பேரின் தண்டனை நிறுத்திவைப்பு

220 0

high_court_madurai_2444480fதஞ்சை மாவட்டம், கும்பகோணம் பள்ளியில் தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் கல்வித் துறை அலுவலர்கள் 4 பேருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை நிறுத்தி வைத்து, அவர்களை ஜாமீனில் விடுதலை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி யில் கடந்த 16.7.2004-ல் நிகழ்ந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் இறந்த னர். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமி உட்பட 21 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த கும்ப கோணம் நீதிமன்றம், பழனிச் சாமிக்கு ஆயுள் தண்டனை, பழனிச் சாமியின் மனைவியும் தாளாளரு மான சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலெட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலெட்சுமி, சமையல்காரர் வசந்தி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பாலாஜி, பொறியாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கி 2014 ஜூலையில் தீ்ர்ப்பளித்தது. குற்றம் சுமத்தப்பட்ட மற்ற 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் புலவர் பழனிச் சாமி உள்ளிட்ட 10 பேரும் தண் டனையை ரத்து செய்து, விடுதலை செய்யவும், அதற்கு முன் தங்களின் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீனில் விடுதலை செய்யக் கோரியும் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். 11 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து போலீஸ் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் எம்.சத்தியநாரயணன், வி.எம்.வேலுமணி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. முதுமை காரணமாகவும் தண்டனை காலத்தின் பெரும்பகுதியை அனுபவித்துவிட்டதாலும் தலைமை ஆசிரியை சாந்தலெட்சுமி, கல்வித் துறை அலுவலர்கள் தாண்டவன், பாலாஜி, சிவபிரகாசம், துரைராஜ் ஆகியோரின் தண்டனையை நிறுத்திவைத்து, அவர்களை ஜாமீனில் விடுதலை செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆயுள் தண்டனை விதிக்கப் பட்ட புலவர் பழனிச்சாமி சிறையில் உடல்நலக் குறைவால் அவதிப் படுவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து அவருடைய மருத்துவ ஆவணங் களைத் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்த வழக்கில் 5 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட பழனிச்சாமியின் மனைவி சரஸ்வதி, அண்மையில் உடல்நலக் குறைவால் இறந்தார். இதனால் அவரது மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.