சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 1,102 தொலைபேசிகள் மீட்பு!

275 0

கடந்த நான்கு வாரங்களாக நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது கைதிகளிடமிருந்து 1,102 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த தேடுதலின் போது 668 சிம் அட்டைகளும், 1,310 தொலைபேசி மின்கல மின்னேற்றிகளும் கைப்பற்றப்பட்டுக்களதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 277 தொலைபேசிகளும், 132 சிம் அட்டைகளும், 286 மின்னேற்றிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 203 தொலைபேசிகளும், 144 சிம் அட்டைகளும், வெலிகட சிறைச்சாலையிலிருந்து 199 தொலைபேசிகளும், 125 சிம் அட்டைகளும் மீட்க்கப்பட்டுள்ளன.

அததேவளை கொழும்பு மெகசின் சிறைச்சாலையிலிருந்து 133 தொலைபேசிகளும் 108 சிம் அட்டைகளும், வெலிகட சிறைச்சாலையிலிருந்து 28 தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளது

அதேவேளை பெண் கைதிகளை தடுத்து வைத்துள்ள ‘Ward Z of the prison’ என்ற சிறைச்சாலைக்குள்ளும் இந்த விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த தேடுதல் நடவடிக்கையின்போது சுமார் 200 கைதிகள் 20 மின்கலன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சிறச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.