கிளிநொச்சி உருத்திபுரத்தில் கழிவாற்று உடைப்பு-மக்கள் அவலம்(காணொளி)

329 0

uruththirapuram-8கிளிநொச்சி  உருத்திரபுர கிராமத்தில்  60 வருடத்திற்கு மேலாக மாற்றமேதும் பெறாத பௌதீக கட்டுமானங்களோடு அபாய சோதனயைத் தருவதும்  மக்களின் வேதைனையாக கருதப்படும் கழிவாற்று உடைப்பு அண்மைக்கால மழையினால் அதிகளவில் சிறு மழைக்கே மக்களின் குடியிருப்பை மூடுமளவிற்கு குடிமனையினுள்ளே புகுந்து விடுகின்றது.

பெரியளவிலான நான்கு கிராம சேவகர் பிரிவினையும் அதிகளவான கிராமங்களுக்கான பிரதான பிரயாண மார்க்கமாகவும் உருத்திரபுரம் காணப்படுகின்றது. இதில் பிற இடங்களில் காணப்படும் நான்கு பிற குளங்களினது நீரும் புதுமுறிப்பு விவசாய நிலங்களின் வடிநீரும் மேலதிக நீரும், நீரேந்தல் ஊடாக கிடைக்கும் நீரும் சேர்ந்து உருத்திரபுர மக்களை இன்னல்களுக்குள்ளாக்கி வருகின்றது.

அன்றாட மக்களின் வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன்  பெரும்  மழைகாலங்களில் மக்களின் இடம்பெயர்வும் சில சந்தர்ப்பங்களில் அபாயங்களும் நிகழ்ந்துள்ளது  சிறு மழைக்கே வெள்ளக்காடாக மாறும் உருத்திரபுர பிரதேசமும் குறிப்பாக உருத்திரபுர 5ம் வீதியே முதலில் பாதிப்பை எதிர் கொள்வதுடன் பாரிய சேதத்தையம் கொண்டள்ளது.

மழை வர மக்களின் கூக்குரலுக்கு அதிகாரிகள் சற்று அசைவதும் மழை வடியும் வரை பொறுமைகாத்து மௌனமாகி விடுகின்றார்கள். எனவே மக்களின்  கேள்விகள் பலனற்றதால் மக்கள் நீதி தேடி வெளியே வர முற்படுகின்றார்கள் எனவே மக்களுக்கான உடனடித்தீர்வை  எதிர்பார்க்கின்றார்கள்.

தொடர்ச்சியாக கடந்த மூன்று  தினங்கள்  பெய்து வரும் மழையினால் உருத்திர புரம்  கிராமத்தின் பிரதான வீதிமுதல்  உருத்திரபுரத்தினை சூழ உள்ள அனைத்து வீதிகளும்   வெள்ளத்தினால்  மூடப்பட்டுள்ளது இதனால்  குறித்த கிராமத்தில்  வசிக்கின்ற ஆசிரியர்கள் ,மாணவர்கள் மற்றும் கூலித்தொழிலாளிகள் கூட குறித்த கிராமத்தை விட்டு வெளியே  தமது வேலைகளைப்  பார்ப்பதற்குக்  கூட  முடியாத  நிலை காணப்படுகின்றது அத்துடன்  அவசராமாக  ஒருவர் வைத்திய சாலை செல்ல வேண்டுமெனில் கூட  வைத்திய சாலைக்கு செல்லமுடியாத  நிலைமையில் உள்ளார்கள்  அவர்களது போக்குவரத்துக்கள்  முற்றிலும் பாதிப்படைந்துள்ள நிலையில்  உருத்திரபுரத்திற்கு பின்புறமாக உள்ள ஒரு வயல்வெளிப் பாதையூடாகவே  பல கிலோமீட்டர்கள்  பயணம் செய்தே அவர்களது  அன்றாடத் தேவைகளை பூர்த்திசெய்ய வேண்டியுள்ளது.