
மனிதாபிமானம், ஈகம் நிறைந்த விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை எடுத்துரைக்கும் புலம்பெயர் தமிழ் இளையோர்கள்
மாவீரர் வாரத்தை (21.11.2016-27.11.2016) முன்னிட்டு தமிழ்த் தேசிய விடுதலை என்ற உயரிய இலட்சியத்திற்காக களமாடி தம்முயிரை ஈகம் செய்த மாவீரர்களது உன்னத தியாகங்களையும், அவர்களின் அர்ப்பணிப்பையும் பறைசாற்றும் விதமாகவும் யேர்மனியில் பல்வேறு நகரங்களில் தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனியின் ஏற்பாட்டில் மனிதநேய செயற்பாடுகளும், வணக்க நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதேபோல் 22.11.2016 அன்று எசன் நகரில் தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனியின் ஏற்பாட்டில் இரத்த தான நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இவ் நிகழ்வில் 25ற்கும் மேற்பட்ட இளையோர்கள் கலந்துகொண்டார்கள்.
பிறரது வாழ்வுக்காக தமது உயிரை தியாகம் செய்வது மனிதச் செயலன்றி தெய்வச் செயலாகும். இரத்தத்தை தியாகம் செய்து மனிதத் தன்மையே உயர்ந்தது எனக் காட்டியது எமது போராட்டம் . அந்த போராட்டத்தின் புனிதத்தை எடுத்துரைக்கும் முகமாகவே இளையோர்களின் இரத்த தான நிகழ்வு அமைந்திருந்தது.
தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி














