முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ஜூன் மாதம் 25 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் கிஹான் குலதுங்க முன்னிலையில் நேற்று (22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த வழக்கு தொடர்பான சாட்சி விசாரணைகள் இடம்பெற்றது.
இதனை அடுத்து மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட காலப்பகுதியினுள் சட்டவிரோதமாக 30 கோடி ரூபாய்க்கும் அதிக பணத்தை கையகப்படுத்தியதன் ஊடாக பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்துள்ளதாக அவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

