தமிழக சட்டசபைக்கான 3 தொகுதி தேர்தலில் அ.தி.மு.க. முன்னிலை

278 0

201611221024489821_admk-candidates-leads-in-votes-in-3-seats-tn-assembly_secvpfதமிழக சட்டசபைக்கான தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.தமிழ்நாடு சட்டசபைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து அங்கு வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சீனிவேல் மரணம் அடைந்ததால் அங்கு இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டது. இதேபோல், புதுவையில் நெல்லித்தோப்பு சட்டசபை தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மேற்கண்ட 4 தொகுதிகளிலும் கடந்த 19-ம் காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. இந்த தொகுதிகளில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.வாக்கு எண்ணும் அறைகளுக்குள் வேட்பாளர்களின் அங்கீகாரம் பெற்ற முகவர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கையை கண்காணித்து வருகின்றனர்.

காலை 10 மணியளவில் வெளியான முடிவுகளின்படி தஞ்சை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரங்கசாமி சுமார் 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதேபோல், அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி சுமார் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.