ஆதார் சேர்க்கை மையங்களில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

296 0

201611221035152533_aadhaar-enrollment-centers-can-apply-to-work-in-the_secvpfஆதார் சேர்க்கை மையங்களில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தமிழகம் முழுவதும் 486 அரசு இசேவை மையங்களை அமைத்து அரசின் பல்வேறு துறைகள் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது.மேலும், கூடுதலாக 339 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களையும் அமைத்து புதிதாக ஆதார் சேர்க்கை பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. இம்மையங்களில் பொதுமக்கள் புதிதாக ஆதார் எண் பெறுவதற்கு விண்ணப்பம் செய்து வருகின்றனர்.

தற்போது, ஆதார் சேர்க்கைக்கு அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் வருவதால் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளது. எனவே, ஆதார் சேர்க்கை மையங்களில் தரவு உள்ளீட்டாளராக பணியாற்ற விரும்புவோர் இந்நிறுவனத்தின் இணையதளத்தில் www.tactv.inஇதற்கென ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

ஆதார் சேர்க்கை மையங்களில் தரவு உள்ளீட்டாளராக பணியாற்றுவதற்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தரவு உள்ளீட்டாளருக்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

எனவே, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும், ஆதார் சேர்க்கை மையங்களில் தரவு உள்ளீட்டாளராக பணியாற்றுவதற்கு விரும்புவோர் தாங்கள் பெற்றுள்ள சான்றிதழை இந்நிறுவனத்தின் இணையதளத்தில் www.tactv.in 30.11.2016க்குள் பதிவு செய்யலாம் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. புதிதாக ஆதார் சேர்க்கை மையங்கள் அமைத்தப்பின், தேவைக்கேற்ப, தரவு உள்ளீட்டாளர்களின் விண்ணப்பங்கள் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு, தகுதிவாய்ந்தவர்கள் பணியமர்த்தப்படுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.