வவுனியா – கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் இன்று (18) அதிகாலை வாள்களுடன் சென்ற சிலர், மோட்டார் சைக்கிளை எரித்ததுடன், அங்கிருந்த இரு நாய்குட்டிகளையும் கடத்திச் சென்றுள்ளனர்.
இதன்போது குறித்த வீட்டின் கதவு மற்றும் யன்னல்களையும் குறித்த நபர்கள் சேதமாக்கியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணைகளை முன்னெடுத்ததுடன், குற்றத்தடுப்பு பிரிவினர் சிசிடீவியின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




