திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கைக்குண்டு ஒன்றினை வைத்திருந்த சந்தேக நபரை இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க நேற்று(17) உத்தரவிட்டார்.
திருகோணமலை திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கடந்த வருடம் திருகோணமலை அலஸ்தோட்டம் பகுதியில் கைக்குண்டினை வீசி தங்கும் விடுதியொன்றினை சேதப்படுத்தியமை, கைக்குண்டு வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுகளில் அடிப்படையில் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தியபோதே விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிட்டார்.

