கல்வியின் தகுதிக்கு ஏற்ப அரசு பதவிகளை வழங்க வேண்டும்

327 0

இராணுவத்தில் ஓய்வு பெற்றவர்களை அரசின் உயர் பதவிக்கு அரசு நியமிப்பதான குற்றச்சாட்டுக்கள் படித்த மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட வேட்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் தெரிவித்தார்.

இத்துடன், இந்த செயற்பாட்டை உடனடியாக நிறுத்தி கல்வியின் தகுதிக்கு ஏற்ப இலங்கையில் அரச சேவையில் உள்ளவர்களை பதவிகளுக்கு அரசாங்கம் அமர்த்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (17) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.

மேலும், தற்போது அரச சேவையில் இருக்கின்றவர்கள் உயர் பதவிக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது. இராணுவத்தில் ஓய்வு பெற்றவர்களை அரசின் உயர் பதவிக்கு அரசு நியமிப்பதான குற்றச்சாட்டுக்கள் படித்த மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

குறித்த செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட்டு கல்வியின் தகுதிக்கு ஏற்ப இலங்கையில் அரச சேவையில் உள்ளவர்களை பதவிகளுக்கு அமர்த்த வேண்டிய கட்டாய தேவையில் அரசு இருக்கின்றது. இதனை முன்னெடுக்க வேண்டும்.

இதேவேளை, வேலையில்லா இளைஞர்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. வேலையில்லா பாட்டதாரிகளின் தொகையும் அதிகரித்துச் செல்கின்றது.

இவர்களுக்கு அரச தொழில் வாய்ப்பை வழங்குவதற்கு அரசு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது என்ற உத்தரவாதத்தை மக்களுக்கு வழங்க வேண்டும் அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.