கொரோனா வைரஸ் மீண்டும் பரவும் ஆபத்துள்ளதா? அரசாங்கம் மக்களிற்கு உண்மையை தெரிவிக்கவேண்டும்- லக்ஸ்மன் கிரியல்ல

275 0

இலங்கையில் இரண்டாவது சுற்று கொரோனா வைரஸ் ஆபத்து காணப்படுகின்றது என்றால் அரசாங்கம் தேர்தலை நடத்தக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் லக்ஸ்மன் கிரியல்ல வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் தேர்தலை நடத்தலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை அவர் இரண்டாவது சுற்று ஆபத்து நிலவுகின்றது என அவர் தெரிவித்துள்ளார் என்பதையும் லக்ஸ்மன் கிரியல்ல சுட்டிக்காட்டியுள்ளார்

அரசாங்கம் நேர்மையுடன் மக்களிற்கு நாடு தேர்தலை நடத்தும் நிலையில் உள்ளதா என்பதை தெரிவிக்கவேண்டும் மக்களின் உயிர்களிற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கமும் வேட்பாளர்களும் தேர்தலிற்காக பெருமளவு பணத்தை செலவிடவேண்டியுள்ளதால் இவ்வாறான நடவடிக்கைகளை சாதாரணமாக கருதக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே அதிகாரிகள் தேர்தல் குறித்து அறிவித்திருக்கவேண்டும் என தெரிவித்துள்ள லக்ஸ்மன் கிரியல்ல 40 வீதமானவர்களே தேர்தலில் வாக்களிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.