இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனையும், ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் புள்ளிப் பதிவாளருமான (Scorer) பூஜானி லியனகே நேற்றுமுன்தினம் தன்னுடைய 33 ஆவது வயதில் அகால மரணமானார்.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி குழாத்தில் இடம்பிடித்த பின்னர், உள்ளூர் போட்டிகளில் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடியிருந்த பூஜானி லியனகே குருநாகல்,கட்டுப்பொத்த பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் கடந்த திங்களன்று மரணமடைந்தார்.
இவர் கொழும்பிலிருந்து அநுராதபுரத்துக்கு செல்லும் வழியிலேயே இந்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளதாகவ தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூர் கழக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து, கிரிக்கெட் போட்டிகளின்போது புள்ளிப் பதிவாளராக செயற்பட்ட பூஜானி, தான் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் காலப்பகுதியில் சுழற்பந்து சகலதுறை வீராங்கனையாக ; விளங்கினார்.
பூஜானி உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும்போது இலங்கையின் மகளிர் வீராங்கனைகளுக்கு ஒரு ஊக்குவிப்பாளராக விளங்கினார்.
பூஜானியின் ஆத்மா சாந்திக்காக இலங்கையின் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் மற்றும் இந்நாள் வீராங்கனைகள், கிரிக்கெட் கழகங்கத்தினர் உள்ளிட்ட விளையாட்டு சமூகத்தினர் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

