திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கண்டல்காடு, மணல் ஆறு பிரதேசத்தில் நேற்று (15) அனுமதிபத்திரம் இன்றி மணல் ஏற்றிய எட்டு நபர்களை கைது செய்ததாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, மணல் ஏற்றிய நிலையில் 4 டிப்பர் மற்றும் 4 உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களையும் கைப்பற்றப்பட்ட வாகனங்களையும் இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்

