பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை

316 0
மாதம்பே பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மரமொன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இன்று (16) அதிகாலை குறித்த கான்ஸ்டபிளின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம், கொடிகாமம் பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிலாபம் பதில் நீதவான் மற்றும் சிலாபம் பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பின்னர் உயிரிழந்தவரின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கையிடுமாறு பதில் நீதவான் சட்ட வைத்திய அதிகாரிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மாதம்பே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.