நீா் இறைக்கும் இயந்திரங்களை திருடிய 4 நபர்கள் கைது

333 0

யாழ்.கோப்பாய் பொலிஸ் பிாிவுக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் நுழைந்து நீா் இறைக்கும் இயந்திரங்களை திருடி வந்த 4 திருடா்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, திருடா்களிடமிருந்து 4 நீா் இறைக்கும் இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட 4 திருடா்களும் இன்று (15) நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனா்.