சென்னை தலைமைச்செயலக பத்திரிகையாளர் அறை மூடல்

332 0

பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரவி வரும் நிலையில் சென்னை தலைமைச்செயலக பத்திரிகையாளர் அறை மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தொற்று ஊருடுவியது. அங்கு கடந்த 8-ந்தேதி நிலவரப்படி 44 ஊழியர்கள் கொரோனா பிடியில் சிக்கி இருந்தனர். இதைத்தொடர்ந்து 250 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 138 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் மருத்துவமனைக்கு போக விரும்பாமல் வீட்டு தனிமையில் இருக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து அலுவலகங்களும் சனிக்கிழமை மற்றம் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறை மூடப்பட்டது.

தலைமைச் செயலகத்தில் பணியில் இருந்த பத்திரிகையாளர் சிலருக்கு தொற்று உறுதியானதால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் அறை மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.