வடமராட்சியில் குழு மோதல்- மூவர் காயம்

327 0

வடமராட்சி- கிழக்கு குடத்தனை பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குடத்தனை கிழக்கு குலான் எனும் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

இதில் மூவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இரண்டு குழுக்களுக்கு இடையில் நீண்டகாலமாக நீடித்து வந்த முரண்பாடே மோதலுக்கு காரணம் எனவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பருத்தித்துறை  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.