அரசாங்கத்தின் தோல்விகள் குறித்து மக்கள் நன்கு அறிந்துள்ளனர்

331 0

அரசாங்கத்தின் தோல்விகள் குறித்து மக்கள் நன்கு அறிந்துள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தல் முடிவடைந்த பின்னர் அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களின் விலையை மீண்டும் அதிகரிப்பதற்கு திட்டமிடுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறும் நோக்கத்துடனேயே தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பி;த்தது என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போது 113 ஆசனங்களை பெறுவதற்கு கூட அரசாங்கம் நெருக்கடியை சந்தித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி வலுவான கூட்டணியாக மாறிவருகின்றது என அவர் தெரிவித்துள்ளார். வாழ்க்கை செலவு அதிகரிப்பு அனைத்து மக்களையும் பாதித்துள்ளது அனைத்து கட்சியினரையும் பாதித்துள்ளது எனதெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மக்களை ஏமாற்றியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது என தெரிவித்துள்ளார்