சிறிலங்காவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை

311 0

சிறிலங்காவில் வெலிமடை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகதலாவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியிலுள்ள இரட்டைமாடி வீட்டுக்குள் வைத்தே 60 வயதுடைய குறித்த நபர் நேற்று (வெள்ளிக்கிழமை) கொலை செய்யப்பட்டுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர், ஒரு பிள்ளையின் தந்தையாவார். குடும்ப உறுப்பினர்கள் வெளியில் சென்றிருந்த  வேளையிலேயே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதன் பின்னணி என்னவென்பதை கண்டறிவதற்காக வெலிமடை பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் எவரேனும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.