உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகம், கரைச்சி பிரதேச சபை, தர்மபுரம் சுகாதாரப் பணிமனையினர் இணைந்து சிரமாதான பணி ஒன்றினை நேற்று (09) முன்னெடுத்து இருந்தனர்.
இத்துடன் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனமான SLCDF நிறுவனமும் இணைந்து கொரோனா தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வானது அதிகளவான ஊழியர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டது.
கண்டாவளை பிரதேசத்திற்கு உட்பட்ட பரந்தன் ஏ-09 வீதியின் இரு மருங்கிளும் உள்ள குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு அகற்றப்பட்டன.
இந்த நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலகர் பிருந்தாகரன் கரைச்சி பிரதேச தவிசாளர் அ.வேழமாளிகிதன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் தர்மபுரம் சுகாதார பணிமனை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

