புலிகளை நினைவு கூர முடியாது-அரசாங்கம்

314 0

ruwanபோரின் போது கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூருவதற்கு எவராவது முற்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன அறிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி உயிர்நீத்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க மாவீரர்களை நினைவுகூருவதற்கு தமக்கு சகல உரிமைகளும் இருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கடந்த சனிக்கிழமை, யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது, எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் தினத்தை நல்லூரில் அனுட்டிக்கப்போவதாக அறிவித்ததுடன், இதற்கு அனைத்து உரிமையும் தமக்கு இருப்பதாகவும் கூறினார்.ஆனால் போரின் போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகளை நினைவுகூர அனுமதி இல்லை என்று ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் றுவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இதனையும் மீறி எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் தினத்தை அனுட்டிக்க முற்பட்டால் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் விஜேவர்தன திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.