சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பாக புதிய அரசாங்கத்தில் மீள்பரிசீலனை செய்யப்படும் – விஜயதாச

322 0

அரசியலமைப்பு பேரவையினால் ஸ்தாபிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் புதிய அரசாங்கத்தில் மீள்பரிசீலனை செய்யப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த அவர், தேர்தல் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு ஆகியவற்றின் சுயாதீனத்தன்மை பல சம்பவங்கள் ஊடாக கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

மேலும் பொதுத்தேர்தலை தொடர்ந்து பிற்போடவது அரசியலமைப்புக்கு முரணான செயற்பாடாகும் என தெரிவித்த அவர் மக்களின் ஜனநாயக உரிமையினை சவாலுக்குட்படுத்தி தேர்தல் ஆணைக்குழு பொது மக்களுக்கு துரோகமிழைத்துள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.

பொதுத்தேர்தலை நடத்த உலக  சுகாதார ஸ்தாபனதத்தில் அறிவுறுத்தல்களை பெறுவது தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரது செயற்பாடு அல்ல எனவும் விஜயதாச ராஜபக்ஷ.தெரிவித்துள்ளார்.

தேர்தல்  ஆணைக்குழு அரசியலமைப்பிற்கு முரணாகவே செயற்பட்டு மக்களுக்கு துரோகமிழைக்கிறது என்றும் சுயாதீமான  ஆணைக்குழுவின் உறுப்பினரான ரட்ணஜூவன்  ஹூல்  ஐக்கிய தேசிய கட்சியின் பங்காளியாக  செயற்படுகிறார் என்றும் அவர் கூறினார்.