சென்னையில் 34 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு

254 0

சென்னையில் சுமார் 34 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தொற்று தடுக்கும் நடவடிக்கையாக பொது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வாகன போக்குவரத்துகள் முடங்கின. அப்போது பெட்ரோல், டீசல் விற்பனை மிகவும் குறைந்ததால் தினந்தோறும் விலையை நிர்ணயிக்கவில்லை.

தற்போது பொது முடக்கம் அமலில் இருந்தாலும் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் வாகனங்கள் அதிக அளவில் ஒடுகின்றன.

இந்நிலையில் சென்னையில் இன்று 34 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இன்று சென்னையில் பெட்ரோல் ரூ. 75.54-க்கும் (53 பைசா உயர்வு), டீசல் ரூ. 68.22-க்கும் (52 பைசா) விற்பனையாகிறது.