ரவிராஜின் கொலை யாரால், ஏன் செய்யப்பட்டது? என்பது தெளிவற்ற நிலையிலேயே உள்ளது – சம்பந்தன்

307 0

140810162702_sampanthan_640x360_afpஅரசியல் தீர்வு என்பது தமிழர்களுக்கு மாத்திரம் தேவையானதல்ல. பெரும்பான்மை இனத்திற்கும், முழு நாட்டிற்கும் தேவையான ஒன்றாகவே இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நடராஜா ரவிராஜின் 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவரது உருவச்சிலை திறப்புவிழா மற்றும் நினைவுக் கூட்ட நிகழ்வு யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொன் விழாமண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ரவிராஜின் கொலை யாரால் செய்யப்பட்டது? ஏன் செய்யப்பட்டது? என்பது தொடர்பில் தெளிவற்ற நிலையே காணப்படுகின்றது.

ரவிராஜ் அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டார். தனிப்பட்ட முறையில் அவருக்கு எதிரிகள் இல்லை. அவர் எவரையும் புண்படுத்தவில்லை.

அவர் அரசியல் ரீதியாக மிகவும் நிதானமாக செயற்பட்டார்.

எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் நியாயமான நிரந்தர தீர்வு வருவதாக இருந்தால், அந்த விடயத்தில் பெரும்பான்மையாக இருந்த சிங்கள மக்களும் பங்காளியாக இருக்க வேண்டும் என்றே செயற்பட்டார் எனவும் சம்பந்தன் குறிப்பிட்டார்.