சிறிலங்காவில்ஊரடங்கு சட்ட அமுலாக்கல் தொடர்பாக புதிய அறிவிப்பு

385 0

சிறிலங்கா முழுவதும் ஊரடங்கு சட்ட அமுலாக்கல் காலம் மேலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று (சனிக்கிழமை) முதல் சிறிலங்காவின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு  தெரிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் தொடர்பான ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்றிரவு வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட அறிவித்தலிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது இதுவரைக்காலமும் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டது. நேற்றும், நேற்று முன்தினமும் சிறிலங்கா முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கான அனுமதியில் மாற்றங்கள் இல்லை என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.