சரத் பொன்சேகாவிடம் ஒரு மணி நேரம் வாக்குமூலம் பதிவு

55 0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் இன்று பகல் சுமார் ஒரு மணித்தியாலம் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 18ஆம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படும் வகையில் கருத்து வெளியிட் டார் என அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இன்று வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான அவரிடம் சுமார் ஒரு மணித்தியாலம் வாக்கு மூலம் பெறப்பட்டது.