பேரக்குழந்தையை பெற்றெடுக்க போராடி வென்ற மூதாட்டி

443 0

201607021156526448_Woman-wins-right-to-give-birth-to-grandchild_SECVPFஇறந்த மகளின் கருமுட்டை மூலம் பேரக்குழந்தையை பெற்றெடுக்க போராடிய மூதாட்டி வெற்றி பெற்றார்.
இங்கிலாந்தை சேர்ந்த 28 வயது பெண் குடல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2011–ம் ஆண்டு மரணம் அடைந்தார். அதற்கு முன்பு தனது கருமுட்டைகளை எடுத்து பத்திரமாக உறையவைத்தார்.அதை கருவாக மாற்றி தனது தாயின் கர்ப்ப பையில் சுமந்து குழந்தையாக பெற்றெடுக்கவேண்டும் என விரும்பினார். அதை தனது கடைசி விருப்பமாக தாயாரிடம் கூறிவிட்டு உயிர் துறந்தார்.எனவே தனது மகளின் இறுதி ஆசையை நிறைவேற்ற 60 வயது தாய் விரும்பினார். அதற்காக உறை நிலையில் உள்ள தனது மகளின் கருமுட்டைகளை தருமாறு ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் கேட்டார்.

ஆனால் கருமுட்டைகளை தர நிர்வாகம் மறுத்து விட்டது. மரணம் அடைந்த அவரது மகள் சட்டப்படியாகவும் ஆவண ரீதியாகவும் இது குறித்துதெரிவிக்கவில்லை என கூறிவிட்டனர்.

எனவே அந்த தாய் லண்டன் கீழ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அங்கும் அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. அதை தொடர்ந்து அவர் லண்டன் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு மகளின் விருப்பத்தை ஏற்றது. அவரது கருவை தாய் சுமந்து பேரக்குழந்தையை பெற்றெடுக்கலாம் என தீர்ப்பளித்தது.

Leave a comment