தமிழில் தேசிய கீதம் – வழக்கு தள்ளுப்படி

259 0

untitledகடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இடம்பெற்ற சுதந்திர தின விழாவின்போது தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பினை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப்பட வேண்டும் என வழக்கினை தாக்கல் செய்தவர்கள் கோரியிருந்தனர்.

இது அடிப்படை உரிமையினை மீறும் செயல் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

எவ்வாறாயினும் சட்டமா அதிபர் சாகர்பாக முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் விராஜ் தயாரத்ன சிங்கள மொழியிலான தேசிய கீதம் அரசியல் அமைப்பிற்கு உட்பட்ட வகையில் உள்ளது போலவே, அதன் தமிழ் மொழி மூலமான தேசிய கீதமும் அரசியல் அமைப்பிற்கு அமையவே உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதேவேளை, அரசியல் அமைப்பின் 18 ஆம் மற்றும் 19 ஆம் சரத்துக்களுக்கு அமைய சிங்களமும் தமிழும் உத்தியோகபூர்வ மொழிகளாகவும் தேசிய மொழிகளாகவும் உள்ளன.

இது 13ஆம் அரசியலமைப்பு சீர்திருத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.