5000 ரூபா கொடுப்பனவுக்காக பாலியல் ரீதியான இலஞ்சம் கோரப்படுவதாக குற்றச்சாட்டு

293 0

மலையகத்தில் 5000 ரூபா நிவாரணம் வழங்களில் இழுத்தடிப்புகளும், கழுத்தறுப்புகளும் தொடர்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்தள்ளார்.

பதுளையில் வைத்து நேற்று (23) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிவாரண பணம் தம்மாலேயே வழங்கப்படுவதாக ஒரு சில மலையக அரசியல்வாதிகள் தம்பட்டம் அடித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிவாரணம் பெறுவதற்கான விண்ணப்பபடிவங்கள் 25 ரூபா முதல் 100 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒரு சில இடங்களில் 5000 ரூபா கொடுப்பனவுக்காக பாலியல் ரீதியான இலஞ்சம் கோரப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழலில் நிவாரணம் வழங்கும் செயற்பாடுகளில் பிரதேச அரசியல் வாதிகளை ஈடுபடுத்த வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளதை வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இனியாவது எந்தவித பாகுபாடுகளும் இன்றி பெருந்தோட்ட மக்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என எதிர்பார்பதாகவும் அரவிந்த குமார் மேலும் தெரிவித்துள்ளார்.