இந்தியாவில் ஒரே நாளில் 6 ஆயிரத்து 700 பேருக்கு புதிதாக கொரோனா

222 0

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 767 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
எனினும் நாடு முழுவதும் வைரஸ் உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பான தற்போதைய நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது. இன்று (மே 24) காலை 8 மணி நிலவரத்தின் படி,
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 767 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 868 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பரவியவர்களில் 73 ஆயிரத்து 560 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் பாதிப்பில் இருந்து கடந்த 24 நேரத்தில் 2 ஆயிரத்து 657 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 441 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், நாடு முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 147 பேர் பலியாகியுள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 867 ஆக அதிகரித்துள்ளது.