யேர்மனி Bremen மற்றும் Bremehaven நகரங்களில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாள்-2020

374 0

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 11 ஆவது ஆண்டு நினைவு நாளை Bremen மற்றும் Bremehaven நகரங்களில் தமிழ் மக்கள் உணர்வோடு ஒன்றிணைந்து சர்வதேசம் பார்த்திருக்க சிங்கள பௌத்த பேரினவாத அரசால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளையும் , தமிழீழ விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்காகவும் சுடர் ஏற்றி மலர் தூவி வணங்கினர்.

கொரோனா தொற்றுநோயினால் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அச்ச நிலைமைக்கு மத்தியிலும் அரச சுகாதார பிரிவின் அறிவுத்தலுக்கு அமைய சமூக இடைவெளியை பேணியவாறு எமது மண்ணின் விடியலுக்காக விதையாகியவர்களுக்காக வணக்கம் செலுத்த உணர்வோடு சங்கமித்த உறவுகள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளின் உயர்வான நிலையை உணர்ந்து, தாய் மொழியாம் தமிழை காப்பதற்கும், தமிழர்களின் தாயகத்தை மீட்பதற்கும் உணர்வோடும் உறுதியோடும் பணி செய்து, பாரினில் தமிழரெலாம் தலைநிமிர்ந்து வாழ வழி சமைப்போம் என உறுதியெடுத்துக்கொண்டனர்.

புலம்பெயர் தேசத்தில் பிறந்து வாழந்தாலும் தமது தாயகத்தின் விடுதலை உணர்வை மனதில் நிறுத்தி இவ் நிகழ்வுகளை மிகவும் உணர்வுபூர்வமாக இளையோர்கள் முன்வந்து ஒழுங்குசெய்தமை “தமிழ் மக்களின் விடுதலையே எமது இலட்சியம்” என்று வீழ்ந்த ஒவ்வொரு மாவீரர்களின் கனவும் பலிக்கும் தமிழீழம் பிறக்கும் என்பதனை உறுதிப்படுத்தியது.