சர்வதேச சட்டங்களுக்கு மாறாக சிறிலங்கா அரசாங்கம் செயற்படுகின்றது-சிறீதரன்

403 0

போரில் உயிரிழந்த மக்களை  நினைவுகொள்கின்ற நாளை தடுப்பது சர்வதேச சட்டங்களுக்கும் ஜெனீவா தீர்மானங்களுக்கும் மாறாக அரசாங்கம் செயற்படுகின்றது என்பது தெளிவாக விளங்குகின்றது என்று முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

18.05.2020 அன்ற முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களிளை நினைவிற்கொள்ளும் நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்றுள்ளது இந்த நிகழ்விற்கு வருகை தந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்

மேலும் அவர் தெரிவிக்கையில்

முள்ளிவாய்க்கால் 11 ஆம் ஆண்டு நினைவு நாளில் இறந்த தமிழ் மக்களை நினைவிற்கொள்வதற்காக காலை 7.00 மணிக்கு புறப்பட்டு வருகின்ற பாதை எங்கும் தடைமுகாம்கள் புதிய படை காவலரங்கள் ஊடாக எங்கள் பயணத்தினை தடுத்துள்ளார்கள்.

கிளிநொச்சியில் இருந்து புறப்பட்ட நாங்கள் தருமபுரத்தில் தடுக்கப்பட்ட போது உள்ளுர் வீதிகளுக்கூடாக மதியம் 12.00 மணியே முள்ளிவாய்க்கால் மண்ணிற்கு சென்றுள்ளோம்.

கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட 40 (1) தீர்மானம் இறந்தவர்களை நினைவுகூர அனுமதிக்கப்படவேண்டும் என்ற சர்வதேச சட்ட விதிமுறைகளை மீறி இலங்கை அரசு இன்று கொரோனா என்கின்ற நோயினை காரணம் காட்டி அவர்களின் உள்நோக்கம் முழுவதும் வணக்க நிகழ்வுகளை தடைசெய்வதாகவே இருந்தது.

கொழும்பில் வெற்றிவிழா கொண்டாடுவதற்கு கொரோனா தடையில்லை ஆனால் இந்த இடத்தில் அறிவிக்கப்பட்ட சட்ட விதிகளுக்கு அமைய மக்கள் தங்கள் உறவுகளை நினைப்பதற்கு ஒரு பாரிய தடையினை இலங்கை அரசு விதித்துள்ளது.

படையினர் போர்க்குணங்களுடன் படையினர் வீதிகளில் வெறித்தனமாக முகங்களுடன் ஒவ்வொருவரையும் தாக்குகின்ற முகங்களுடன் நிற்பதை நான் பார்த்தேன்.

இந்த நாடு அதளபாதாளத்திற்கு இட்டு செல்கின்றது என்பது இப்ப அல்ல முதலே தெரிந்த விடையம் ஆனாலும் வணக்க நிகழ்வுகளுக்கு அனுமதித்திருக்கவேண்டும் . சட்டவிதிகளுக்கு அமையவே சமூக இடைவெளியில் சென்று தங்கள் உறவுகளுக்காக கண்ணீர் செலுத்துகின்றார்கள்

நினைவுகொள்கின்றார்கள் ஆண்டிற்கு ஒருமுறை இழந்துபோன ஒரு இலட்சத்தி நாற்பதாயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்காக நினைவுகொள்கின்ற நாளை தடுப்பது சர்வதேச சட்டங்களுக்கும் ஜெனீவா தீர்மானங்களுக்கும் மாறாக அரசாங்கம் செயற்படுகின்றது என்பது தெளிவாக விளங்குகின்றது.

அரசு தன்னுடைய போர்க்குணங்களை மாற்றி இந்த கொரோனா காலத்தில் கூட தமிழர்களின் ஒரு இனமாக இந்த நாட்டின் பிரஜைகளாக கருதுகின்ற எண்ணமில்லாமல் நடந்துகொள்வதை முள்ளிவாய்க்கால் மண்ணில் காணக்கூடியதாக இருக்கின்றது.

குறிப்பு:-
சி.சிறீதரன் அவர்களுக்கு தேர்தல் காலங்களில் ஞானம்பிறப்புது அனைவரும் அறிந்த செய்தி.