பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து; 98 பேர் விடுவிப்பு!

463 0

யாழ்ப்பாணம் – பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 98 பேர் தமது சொந்த இடங்களுக்கு இன்று (19) அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 98 பேரில் 6 மாத குழந்தை ஒருவர் உட்பட 10 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.

22 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என PCR பரிசோதனை மேற்க்கொண்ட பின் மருத்துவ சான்றிதழ்கள் வழங்கப்பட்டு இன்று காலை பேரூந்து மூலம் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.