143 நாடுகளிலுள்ள 38 ஆயிரத்து 983 பேரை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை!

251 0

143 நாடுகளிலுள்ள 38 ஆயிரத்து 983 பேரை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு எதிர்பார்ப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவர்களில் 27 ஆயிரத்து 854 பேர் வெளிநாடுகளில் பணியாற்றுபவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 3 ஆயிரத்து 78 பேர் வெளிநாடுகளில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள். மேலும் 4 ஆயிரத்து 400 பேர் குறுகிய கால வீசா அடிப்படையில் வெளிநாடுகளில் தங்கியுள்ளவர்கள்.

அத்துடன் 3 ஆயிரத்து 527 பேர் புலம்பெயர்ந்தோரை சார்ந்தவர்கள் என அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர இரட்டை குடியுரிமை பெற்றுள்ள 484 இலங்கையர்களும் இந்த பட்டியலில் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு எதிர்பார்ப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த மாதம் 21 ஆம் திகதி இதுவரையில் வெளிநாடுகளில் இருந்த 3 ஆயிரத்து 600 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.