விதை நடும் கருவி கண்டுபிடிப்பு!

305 0

fotorcreated-159  கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த புதிய கண்டுபிடிப்பு முயற்சியாளர் கிருஸ்ணமூர்த்தி ரவிதாஸ் என்பவரால் விதை நடும் இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர் 2010ஆம் ஆண்டு தானாகவே விதை நடும் இயந்திரத்தைக் கண்டுபிடித்ததுடன், இப்போது இவர் மின்சாரத்தின் உதவியுடன் விதை நடும் இயந்திரத்தை உருவாக்கி விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தியதுடன், தனது மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவரது அயராத முயற்சினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தின் மூலம் மணித்தியாலத்திற்கு 3 ஏக்கர் நிலங்களில் விதைகளை விதைக்க முடிவதுடன் ஒரே நேரத்தில் 4 நிரல்களில் விதைகளை விதைக்க கூடிய வசதிகளையும் கொண்டுள்ளதாக இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வியந்திரத்தின் பின்புறம் உள்ள சக்கரமானது விதைகளை விதைக்கின்ற இடைவெளியை நிர்ணயம் செய்வதுடன், தானாகவே குழியைத் தோண்டி தானியங்களை இட்டு மூடிவிடும் வசதி இவ்வியந்திரத்திலுள்ளது.

சோளம்இ பயறு கௌப்பி மற்றும் நிலக்கடலை போன்ற மேட்டு நிலப்பயிர்கள் போன்றவற்றை இவ்வியந்திரம் மூலமாக நடமுடியும். குறைந்தளவு நேரத்தில் கூடிய நிலப்பரப்பில் குறைந்த செலவில் விதைகளை விதைப்பதற்கான வாய்ப்பு இதன்மூலம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார் வடிவமைபபாளர் கிருஷ்ணமூர்த்தி ரவிதாஸ்.