ஊரடங்கு விதிகளை அதிகமாக மீறியது யார்? – இங்கிலாந்தில் நடத்திய ஆய்வில் ருசிகர தகவல்

304 0

இங்கிலாந்தில் ஊரடங்கு விதிகளை அதிகமாக மீறியது யார்? என்பது குறித்து இங்கிலாந்தின் பல்கலைக்கழகங்கள் சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

இங்கிலாந்தில் ஊரடங்கு விதிகளை அதிகமாக மீறியது யார்? என்பது குறித்து அண்மையில் அந்நாட்டின் ஷெப்பீல்டு மற்றும் அல்ஸ்டர் பல்கலைக்கழகங்கள் சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக 13 வயது முதல் 24 வயது வரையுள்ள 2 ஆயிரம் பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன. இதில் 19-24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில் 50 சதவீதம் பேர், தாங்கள் ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியேறி இஷ்டம்போல் ஊர் சுற்றியதையும், இதற்காகதாங்கள் எடுத்த சாகச முயற்சிகளையும் பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்டனர். இவர்களில் 5-ல் ஒருவர் போலீசிடம் பிடிபட்டு அபராதமும் செலுத்தியுள்ளனர்.
இதே வயது கொண்ட இளம்பெண்களில் 25 சதவீதம் பேர், இப்படி விதிமீறல்களில் ஈடுபட்டு உள்ளனர். எஞ்சிய 25 சதவீதம் பேர் 13-18 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவர்.