சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 856ஆக அதிகரிப்பு

358 0

சிறிலங்காவில்  மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 856 ஆக  அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 321 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் 9 பேர்  உயிரிழந்துள்ளனர்.