யேர்மன் தலைநகர் பேர்லினில் “வேரோடும் துயரம் “

657 0

முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் குறியீடாக யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில் புகழ்பெற்ற Britzer Garten வளாகத்தில் 2012 ஆண்டு நடப்பட்ட ஆப்பிள் மரத்தை இன்றைய தினம் பேர்லின் வாழ் மக்கள் பார்வையிட்டனர்.

கொல்லப்பட்ட மக்களுக்கும் , ஈகம் செய்த மாவீரர்களுக்கும் வணக்கம் செலுத்தப்பட்டு இறுதியில் எப்படி ஆப்பிள் மரம் தனது வேர்களை ஆழமாக மண்ணில் பரப்பி நிலைத்திருக்குமோ அப்படி முள்ளிவாய்க்கால் மண்ணில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவுகளும் எமது நெஞ்சங்களில் அழியாத நினைவுகளாக இருக்க வேண்டும் எனவும் அந்த மக்களின் நீதிக்காகவும் விடுதலைக்காகவும் தொடர்ந்து உழைப்போம் என உறுதியெடுத்துக் கொண்டனர்.