சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 824ஆக அதிகரிப்பு

324 0

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 824ஆக அதிகரிப்பு

கடந்த 24 மணித்தியாலத்தில் தொற்று கண்டறியப்பட்ட 27 பேரில் 24 பேர் கடற்படையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடற்படையினருடன் நெருக்கமாக இருந்த 2 பேருக்கும் நேற்று தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் கடற்படை தம்பதி ஒன்றின் 13 மாதங்களேயான குழந்தைக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அத்துடன், டுபாயில் இருந்து நேற்று காலை அழைத்துவரப்பட்ட ஒருவரும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனிடையே, தொற்றுக்குள்ளான 824 பேரில் 232 பேர் குணமடைந்துள்ள நிலையில் 583 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 9 மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.