தாயகமக்களின் அவல நிலை கண்டு இடர்கால நிவாரணம் வழங்கிய யேர்மனியத் தமிழ் இளையோர்கள்

843 0

கொரோனா தொற்றுநோயினால் உலகளாவிய ரீதியாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும் இறந்தும் உள்ளனர் அனைவரும் அறிந்ததே. அந்தவகையில் தொற்றுநோயின் பரவலை தடுக்கும் முகமாக தாயகத்தில் ஏற்பட்ட ஊரடங்கு சட்டத்தினால் தினக்கூலியை நம்பி வாழ்ந்த மக்கள் மிகவும் எந்தவிதமான நிவாரணமும் கிடைக்காத சுழலுக்குள் தள்ளப்பட்டனர். இந்நிலையில் தான் புலம்பெயர் மக்கள் தமது தாயக மக்களை என்றும்போல் தாங்கிநின்றனர்.

யேர்மனியில் தென்மாநிலத்தில் உள்ள Tuttlingen நகர தமிழ் இளையோர் விளையாட்டுக் கழகத்தினரும் தன்னார்வத்தோடு தாயகமக்களுக்கு இடர்கால நிவாரணத்தை வழங்க ஹெல்ப் ஸ்மைல் (Help for Smile) அமைப்பின் ஊடாக முன்வந்தார்கள். Tuttlingen தமிழ் இளையோர் விளையாட்டுக் கழகத்தின் ஊடாக பெறப்பட்ட 750 € வுக்கு 4.5.2020 அன்று முறிகண்டி மற்றும் இந்துபுரம், சாந்தப்புரம் கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் கடந்தகால யுத்தத்தில் தங்கள் அவயங்களை இழந்து வாழும் எம் உடன்பிறப்புகளுக்கு 53 குடும்பங்களுக்கும் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மைத்துவில் கிராமத்தில் வாழும் மிகவும் வறிய நிலையில் உள்ள 60 குடும்பங்களுக்கும் உலர்உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

Tuttlingen நகர தமிழ் இளையோர் விளையாட்டுக் கழகத்தினரின் முன்மாதிரியான மனிதநேய செயலை நாம் பாராட்டுவதோடு தொடர்ந்தும் அவர்கள் தமிழ்த் தேசத்தின் மீதும் தமிழ் மக்கள் மீதும் பாசத்தோடு பயணிப்பார்கள் என்பது முழுமையாக நம்புகின்றோம்.