அரசியல் பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் -சுமந்திரன்

328 0

கொரோனா வைரஸுக்கு எதிராக சிறிலங்காவில் உள்ள அனைவரும் அரசியல் பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு நேற்று  (04) மாலை கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(4) மாலை விஜேராம மாவத்தையில் உள்ள இல்லத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.