ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவு மே மாதத்திற்கும் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என அறிவிப்பு!

320 0

கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்கப்படும் ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவு இரண்டாம் கட்டமாக வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2020 ஏப்ரல் மாதம் மேற்படி கொடுப்பனவு கிடைக்கப்பெற்ற நிலையான நன்மை பெறுனர்கள் ஆவணம், முன்னுரிமை ஆவணம் மற்றும் கிராமிய குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட நன்மை பெறுனர்கள் ஆவணம் ஆகிய ஆவணங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள நன்மை பெறுனர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படும்.

மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்களின் வழிகாட்டலின் கீழ் குறித்த கிராம சேவையாளர்கள் நன்மை பெறுனர்களின் வீடுகளுக்கே சென்று கொடுப்பனவுகளை வழங்கவுள்ளதாக சிறிலங்காவின் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

கொடுப்பனவு வழங்குதல் 2020 எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 15ஆம் திகதி நிறைவுசெய்யப்படவுள்ளது. பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கான சிறிலங்காவின் ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் பின்வருமாறு கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டது.

முதியோர்களுக்கான கொடுப்பனவு

நூறு வயது பூர்த்தியான முதியோர் கொடுப்பனவு – தேசிய முதியோர் செயலகத்தின் மூலம்

அங்கவீனர்களுக்கான கொடுப்பனவு

சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு – அங்கவீனமுடையவர்களுக்கான தேசிய செயலகம்

விவசாயிகளுக்கான ஓய்வூதியம்

மீனவர்களுக்கான ஓய்வூதியம் – விவசாய காப்புறுதி சபையினால்

முதியோர்களுக்கான கொடுப்பனவு, நூறு வயது பூர்த்தியான முதியோர்களுக்கான கொடுப்பனவு, அங்கவீனர்களுக்கான கொடுப்பனவு மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு வழங்குவதற்கு தேவையான நிதி ஏற்பாடுகள் பொருளாதார, கொள்கை அபிவிருத்தி அமைச்சினால் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.

விவசாயிகளுக்கான ஓய்வூதியம் மற்றும் மீனவர்களுக்கான ஓய்வூதியம் உரித்துடைய நன்மை பெறுனர்களுக்கான கொடுப்பனவை வழங்குவதற்கு தேவையான நிதி ஏற்பாடுகளை பொருளாதார, கொள்கை அபிவிருத்தி அமைச்சினால் மகாவலி, விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.